அனைவருக்கும் வணக்கம் & கற்க கல்வி அறக்கட்டளையின் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
கடந்த 2017-ம் ஆண்டில் "கற்க" கல்வி அறக்கட்டளை சார்பாக தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு செய்த நலத்திட்ட உதவிகளின் விவரம்.
06.09.2017 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 320 பேர்கள், சென்னை மாநகரட்சி மாணவர்கள் 350 பேர்கள்.
17.09.2017 அன்று கும்மிடிப்பூண்டி தமிழீழ அகதிகள் முகாமில் 350 மாணவர்கள்.
புழல் அகதிகள் முகாமில் 250 மாணவர்கள்.
10.10.2017 அன்று பெருஞ்சித்திரனார் அவர்களின் மகள் பொற்கொடியம்மாள் நடத்தும் மேடவாக்கம் திருவள்ளுவர் மழலையர் துவக்கப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள்.
பள்ளிக்கரணை பாவணர் தமிழ்வழிப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள்.
25.11.2017 அம்பத்தூர் தாய்தமிழ்ப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள்.
6.12.2017 அன்று குன்றத்தூர் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்வழிப் பள்ளியில் பயிலும் 125 மாணவர்கள்
7.12.2017 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி-1ல் பயிலும் 175 மாணவர்கள்.
08.12.2017 அன்று பூந்தமல்லி அருகில் உள்ள மலையம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் 75 மாணவர்கள்.
மேலும் கண்ணகி நகரிலும் வியாசர்பாடியிலும் மாலை நேரப் பாடசாலை நடத்தப்படுகிறது. மற்றும் ராயப்பேட்டையில் அரசுத் தேர்வுக்கான தகுதி வளர்ப்புப் பயிற்சி வகுப்பும் நடத்தப்படுகிறது.
இவ்வாண்டிலும் இதேபோன்ற எங்கள் உதவி தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதேவேளையில் இதுவரையில் எங்களுக்கு தோள்கொடுத்த தோழர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் எண்ணமுள்ளவர்கள், எங்கள் அறக்கட்டளைக்கு உதவ விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
தொடர்புக்கு :
தொ.எண் - 9444011124,
செயலாளர்,
கற்க கல்வி அறக்கட்டளை,
சென்னை - 78.
01.01.2018
No comments:
Post a Comment