2.6.21

வர்லாம் வர்லாம் வா தலைவா

ஏன் இவ்வளவு பதற்றம் தமிழர்களுக்கு? சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை நான் 100% வரவேற்கிறேன்.

எம்.ஜி.ஆர் காலம் வேறு, தற்போதைய காலம் வேறு. மேலும் அவர் அரசியலுக்கே வராமல் போனால் வரலாற்றில் இதே புகழுடன் நிலைத்துவிடுவார். வந்தால்தான் பவர் ஸ்டார் ஆக முடியும். விஜயகாந்த் இல்லாமல் அரசியல் எவ்வளவு சலிப்படைந்திருக்கிறது என்பதை ஆழ்ந்து யோசியுங்கள். போதாக்குறைக்கு வடிவேலும் நடிப்பதை நிறுத்திவிட்டார். மீம் கிரியேட்டர்ஸ் என்னதான் செய்வார்கள் பாவம்? அந்த இடத்தை நிரப்ப சரியான நபர் திருவாளர் ரஜினிகாந்த் அவர்கள்தான். மேலும் கமல் தப்பித்துவிடுவார் என்றே தோன்றுகிறது. இனி விதவிதமாக ரஜினிக்கும் டி.ராஜேந்தருக்கும் சண்டை என்பது மாதிரி விவாதங்கள் நடக்கும். எண்ணிப்பாருங்கள்... இந்த அருமையானவொரு வாய்ப்பு கிடைக்குமா? இனி புகழை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருபவர்களில் ரஜினிகாந்த் அவர்கள் கடைசி நபராக இருப்பார். மேலும் அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்பதெல்லாம் ஜனநாயகமின்மை. அவர் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பேட்டி கொடுக்க வேண்டும். அறிக்கையோடு நின்றுகொண்டால் மட்டுமே தப்பித்தார்.
தொடர்ந்து தன் பட வெளியீட்டின்போதெல்லாம் டிக்கெட் விலை ஏற்றி விற்கப்படுவதும், தன் ரசிகர்களும் மக்களுமே ஏய்க்கப்படுவதும் தெரிந்தும் அதை தவறு என்றுகூட சொல்ல விரும்பாத நிலைதான் ஆன்மீக நிலை. அவர் பெரிய ஆன்மீகவாதிதான். அதனால் அவர் அரசியல்வாதியாகும் தகுதி உடையவர்தான். அதனால் நாம் ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
"போலோ, சூப்பர் ஸ்டார்க்கி ஜே...!!!"

31.12.2017



No comments:

Post a Comment