17.6.21

கருந்துளை (Black Hole)

Black Hole (கருந்துளை) இருப்பைக் கண்டறிந்து வெளியிட்டது நவீன அறிவியலின் உச்சம். கோட்பாட்டை வெளியிட்ட ஐன்ஸ்டீனால் பார்க்க முடியாததை இன்று நாம் காண்கிறோம். நாம் வாழும் இக்காலம் அறிவியலின் பொற்காலம்.

கருந்துளை, சூரியனை 2 நாட்களில் விழுங்கக்கூடியது. ஒளியையும்கூட விழுங்கும். பூமியைவிடவும் 30 லட்சம் மடங்கு பெரியது. அருகில் வந்தால் நாம் வாழும் பால்வீதி மண்டலத்தையும் உள்வாங்கிவிடும். ஒருவேளை இந்தப் பிரபஞ்சத்தின் விளையாட்டை நிறுத்தக்கூடிய பேராற்றலாகவும் இருக்கலாம். அண்டத்தில் எண்ணற்ற கருந்துளைகள் இருக்கக்கூடும்.
இயற்கையின் பிரம்மாண்டத்தை மனிதர்கள் அறியவும் உணரவும் இயலாதபடி தடுத்து பல்வேறு விதங்களில் மனிதர்களை அச்சமூட்டி வைத்திருக்கும் மதம், கடவுள், விதி, பேய், மந்திரம், சூனியம், கர்மா, மறுபிறவி, சொர்கம், நரகம்....... என்பவைகள் உட்பட்ட எல்லா அறியாமைகளையும் ஒதுக்கித் தள்ளி இயற்கையை இயற்கையாய் காண்போம்.
பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் நாம் இந்த பூமியில் இருந்து வாழ்ந்துவிட்டுப் போகும் சொற்ப விநாடிகளையும் பயத்தாலும் அறியாமையிலும் வீணடிக்காமல் வாழ்வோம்.

11.04.2019



No comments:

Post a Comment