17.6.21

சரக்கில்லாதவர்கள் சிலையுடன் மோதுகிறார்கள்

உலகம் தோன்றிய நாளிலிருந்தே நாத்திகத்தை இப்படி உரக்கச் சொல்லி இயக்கம் கட்டி பரப்பிய தனிமனிதன் யாருமில்லை. ஆதாயத்திற்காகவும் அடிமைப்படுத்தவும் இயற்கையை கற்பித்து பாமர மக்களை பயமுறுத்தும் சுரண்டல்காரர்களுக்கு ஒரு வலுவான எதிர்ப்புக் குரல் இருப்பதே மக்களுக்கு நல்லது. அதன்பொருட்டே பெரியாரின் சிலைகள்.

பெரியாரின் சிந்தனைகளோடு மோத சரக்கில்லாதவர்கள் இருட்டில் அவரது சிலையோடு மோதுகிறார்கள். இன்னும் தேவைப்படும் அவரது தேவையை சமூகத்திற்கு உணர்த்தும் இன்னொரு நிகழ்வே இது.
எதிர்க்க எதிர்க்க அவர் கருத்துக்கள் பரவும்.
உடைத்தவனின் பயம் நகைப்பு தருகிறது. சிலையை சீரமைத்து அங்கு விழா எடுப்பதே சரியான எதிர்வினை.

08.04.2019



No comments:

Post a Comment