2.6.21

பேருந்து கட்டண உயர்வுக்கான காரணம்

இது எத்தனை பேருக்குத் தெரியும்?

எல்லோரும் பேருந்து கட்டண உயர்வுக்கான காரணம் என்னவென கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் தமிழக ஏழை மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் வருகிறது. பணம் உள்ளவர்கள் எந்த நோயானாலும் எவ்வளவு பணம் ஆனாலும் செலவு செய்து தங்களை காப்பாற்றிக் கொள்கின்றனர். ஆனால் பணம் இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள்? முறையான நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஓரளவு எல்லா நோயிலிருந்தும் தப்பிக்கலாம் என்று எத்தனையோ மருத்துவர்கள் எவ்வளவோ முறை சொல்லியும் தமிழக ஏழைபாழைகள் கேட்பதாயில்லை. எனவேதான் மருத்துவர்களின் இந்த பொதுநலப் பரிந்துரையை ஏற்று ஏழைகள் இனி நடைபயிற்சி மேற்கொண்டு நோயிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவே எடப்பாடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு இக்கட்டண உயர்வுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏனோ எடப்பாடி அரசை புரிந்துகொள்ளாமல் பலரும் பலவிதமாக விமர்சிக்கிறார்கள். போராடுகிறார்கள்.
வளமான ஆரோக்யம்...!!
வலிமையான ஏழைகள்...!!!

22.01.2018



No comments:

Post a Comment