1. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திய இந்தியாவை உலக நாடுகள் ஒன்றுகூட கண்டிக்கவில்லை.
2. ஒசாமாவுக்கு அடைக்கலம், தாவூத்துக்கு அடைக்கலம், மசூத் அசாருக்கு அடைக்கலம் என்று தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடாக பாகிஸ்தான் மீது உலக நாடுகள் குத்தியுள்ள முத்திரை இன்னும் முழுதாய் விலகவில்லை. இந்தியாவைக் கண்டிக்காத உலக நாடுகளின் மௌனம்.
3. இந்தியாவுக்கு தீவிரவாத ஒழிப்பில் துணை நிற்பதாக சொல்லும் தன் எஜமான் அமெரிக்கா முற்றிலுமாய் இந்தியா பக்கம் நின்றால் மேலும் சிக்கல்.
4. அபிநந்தன் தாக்கப்படும் வீடியோ வெளியாகிவிட்டதை சரிகட்ட அவரை மரியாதையாக நடத்தி ஜெனீவா ஒப்பந்தத்தை மதிப்பதாக வெளியுலகிற்குக் காட்டியாக வேண்டிய சுய அழுத்தம்.
5. பாகிஸ்தானில் தற்போது தேர்தல் இல்லை. போர் நடத்த வேண்டிய தேவை இல்லை. பழைய ராணுவ ஆட்சியாளர் பெருச்சாளிகளின் அதிகார அரசியலுக்கு இத்தேவை இருந்தது. இம்ரானுக்கு இல்லை.
6. பிடிபட்ட வீரர் அபிநந்தனுக்கு ஏதேனும் நேர்ந்தால் இதுவே போருக்கான அச்சாரமாக மாறக்கூடிய சூழல். ஏனெனில் இந்தியாவில் தேர்தல் நெருங்கிவிட்டது.
7. தன்மீதான பிம்பத்தை மாற்றிக்கொள்ள பாகிஸ்தானுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு.
01.03.2019
No comments:
Post a Comment