16.6.21

பாகிஸ்தான் பயங்கரவாதம்

இந்தியா சொல்வதை நம்பாத அறிவுசார் பொதுமக்கள் பாகிஸ்தான் சொல்வதை மட்டும் அப்படியே நம்பிவிடுவது எப்படி?

எதிரி நாட்டு ராணுவம் விசாரிக்கும்போது அவர்களிடம் பிடிபட்ட ஒரு ராணுவ வீரர் எந்தளவு உண்மையை பேசிவிட முடியும்? அவர்களைப் பற்றிய தவறானவைகளை சொல்ல முடியுமா? உள்நாட்டுப் போராளிகளை இந்தியா எந்தளவு மோசமாக நடத்துகிறதோ அதேபோன்றதொரு மோசமான நாடுதானே பாகிஸ்தானும். திடீரென பாகிஸ்தான் ஆஹா ஓஹோ ஆகிவிட்டது எப்படி?
தீவிரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்கிறார் இம்ரான்கான்.
1. இப்போது தீவிரவாதிகளின் தொல்லை பாகிஸ்தானுக்கு இருக்கிறதா? முடிந்துவிட்டதா?
2. அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் தீவிரவாதிகள் இருப்பது உள்நாட்டிலா? இந்தியாவிலா?
3. ஒருவேளை அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் இருந்தால் நேரடியாக குறிப்பிட்டு அவர்களை அழிக்க இந்தியாவிடமே உதவி கோரலாமே.
4. தங்களுக்குத் தொல்லை கொடுக்கும் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலேயே இருந்தால் தீவிரவாதிகளின் மீதான இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கையை ஆதரிக்கலாமே.
5. அல்லது பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்களே இல்லையென்று அறிவித்து, இந்தியா சொல்லும் விவரங்கள் எல்லாம் பொய் என்று நிரூபிக்க சர்வதேச ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்து, இந்தியாவின் பொய்யை அம்பலப்படுத்தலாமே...!

28.02.2019



No comments:

Post a Comment