2.6.21

"மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றி" - இரா.பாரதிநாதன்

(பக்: 133, விலை: 120ரூ, களம் வெளியீட்டகம்)

'கலைகளின் வழியே மனிதன் சக மனிதனுடனான தனது ஐக்கியத்தை ஆழமாக்கிக் கொள்கிறான்'
'கலை இலக்கியங்கள் மனிதனின் இன்ப துன்பங்களுக்கு வடிகாலாக அமைகின்றன. வாழ்க்கையின் போராட்டச் சிக்கல்களை எளிதாக்குகிறது'
'பிறவிக் கலைஞர்கள் என்று யாருமில்லை, இப்படி சொல்வது சுத்தப் பொய்'
*
'கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே' என்ற கோட்பாடே உயர்வானது என்ற பார்வையில் சமூக மேம்பாட்டிற்கு பயனுள்ள வகையில் இலக்கியம் படைப்பதே சரியானது; அவசியமானது என்று இந்நூலாசிரியர் பதிவு செய்கிறார். தான் எழுதிய நாவல்கள் மற்றும் பிறர் படைப்புகளிலிருந்தும் தெளிவாக மேற்கோள் காட்டி எழுதியுள்ளார். எனினும் நிறைய படைப்புக்களை எடுத்துக்காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இவ்வகையில் சிறு ஏமாற்றமே.

29.01.2018



No comments:

Post a Comment