15.6.21

ஜாதியை ஏன் ஒழிக்க முடியவில்லை?

தனி மனிதர்கள் எல்லாரும் மாறினால் சமூகம் மாறும் என்பதும்கூட கற்பனாவாதம்தான். தனி மனிதர்கள் ஒரு பொது ஒழுங்குக்குள் வாழ முடியாது என்பதற்கான ஏற்பாடுதான் அரசு என்பது. எப்படி மனித சமூகம் படிப்படியாக கல்வியாலும் சுய சிந்தனை அறிவாலும் அவ்வப்போது ஆட்சி செய்தவர்களின் சட்டங்களாலும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டதோ அதேபோல் சட்டங்களால் மட்டுமே இதை சுலபமாக ஒழிக்க முடியும். அப்படி ஒழிய வேண்டும் என்று இங்கு 01% அரசு அதிகாரம்கூட அக்கறையோ விருப்பமோ கொள்ளவில்லை.

மனிதர்களை குறை சொல்லி பயனில்லை. பெரும்பான்மையான மக்கள் எப்போதுமே பண்படுத்தப்படாமல்தான் இருப்பார்கள். அரசு என்ற ஏற்பாட்டின் மூலமாகத்தான் இதை மாற்ற முடியும். இதுவரையிலான ஜாதி ஒழிப்பு பிரச்சாரமெல்லாம் கூர்ந்து கவனித்தால் சடங்குத்தனமாகவே இருக்கிறது. இதில் இம்மியும் தொடர்ந்து முன்னேறவியலாது. ஜாதி மதத்தை விரும்பாதவர்களுக்கு என்று ஒரு கௌரவமான தனி அடையாளத்தை ஏற்படுத்த போராடுவதும், இதற்கென கல்வி & வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் நாளடைவில் சூழல் மாறிவிடும். அதற்கு முதலாக ஜாதி மத அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அதிகாரத்தில்

இருப்பவர்கள் விரும்பாத ஒன்றை ஏதும் அதிகாரமற்ற மனித நேயமுள்ள அறிவாளிகள் விரும்புவதால் மட்டும் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்? எளிமையாக அணுகமுடியாத காவல்துறை மற்றும் நீதித்துறையின் சூழல்கள்தான் ஜாதிகளிடம் பாதுகாப்பு தேடி மக்களை மீண்டும் மீண்டும் திசை திருப்பி விடுகிறது.

15.12.201

No comments:

Post a Comment