வெளிப்படையாக ஒரு கொலை நடந்திருக்கிறது. எப்போது எங்கே குற்றங்கள் நடந்தாலும் அதை பொது சமூக அவமானமாக மாற்ற விழையாமல் ஜாதிப் பின்னணிகளை வைத்தே கூக்குரலெழுப்பும் பலரும் விருத்தாச்சலம் திலகவதி கொலையில் ஏன் இவ்வளவு மௌனம் காக்கிறார்கள்?
இந்த மாதிரியான மனநிலை கொண்டு குற்றங்கள் செய்பவர்களுக்கு நாடறிய வெளிப்படையாக கடும் தண்டனை கொடுத்து எல்லா மாணவர்களுக்கும் தெரியும்படி பரப்புரை செய்ய வேண்டும்.
குற்றங்களின் பின்னிருக்கும் ஜாதி பார்த்து மட்டுமே இயங்கும் பலரால் பொது சமூகத்தின் மனசாட்சி சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தயவுசெய்து யாரும் ஜாதி உணர்வால் குற்றவாளிகளை நியாயப்படுத்தாதீர்கள். எல்லோர் வீடுகளிலும் வளரும் இளம்பெண்கள் பாதுகாப்பாக வாழ அக்கறைப்படும் அனைவரும் இதைக் கண்டித்து எழுதுங்கள்.
தமிழகத்தில் இந்த சில பத்தாண்டுகளாகத்தான், பல நூறாண்டுகளாய் கல்வி மறுக்கப்பட்ட பல சமூகப் பெண்களும் கல்வி பயின்று சகல துறைகளிலும் கால் பதிக்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் இளம்பெண்களுக்கு எதிரான வன்கொடூரங்கள் மீண்டும் அவர்களை பின்னோக்கியே திருப்பக்கூடும். பல பெண்கள் மேற்கொண்டு படிப்பைத் தொடர அவரவர் குடும்பங்களில் தடை ஏற்படவே வழி வகுக்கும்.
எது காதல் என்ற புரிதல் இல்லாத பொது சமூகத்தில் முதல் தலைமுறையாகப் படிக்க வரும் வலுவற்ற எல்லா சமூக ஏழைப் பெண்களையும் காதலிக்க முனையும் போக்கிலி இளைஞர்களை பாலியல் புரட்சி; உரிமை என்று யாரேனும் ஊக்குவித்தால் அது அறிவு ஊனம்.
சட்டமும் நீதியும் நேர்மையாக இல்லாத நாட்டில், ஒருதலைக் காதலால் பாதிக்கப்பட்டு அவமானப்படும் வலுவற்ற பெண்களுக்கு துணை நிற்கவோ ஆதரவு காட்டி வாழ வழி ஏற்படுத்தவோ பாதையில்லாத சமூகத்தில் காதலுக்கு மட்டும் குரல் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது சரியல்ல. படிக்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
குடிகாரர்கள் சட்ட அமைச்சராகும் நாட்டில் ஏழை இளம் மாணவிகளின் பாதுகாப்பு பற்றி யாரிடம் கேள்வியெழுப்ப முடியும் சுய விமர்சனமின்றி?
11.05.2019
No comments:
Post a Comment