2.6.21

கண்ணீர் அஞ்ச்சலி - உதவி ஒளீப்பதிவாளர் வெங்கட்

நேற்று கோட்டூர்புரத்தில் நடந்த சாலை விபத்தில் உதவி ஒளிப்பதிவாளர் வெங்கட் மரணமடைந்தார் என்று தகவல் வந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். கடைசியாக அண்ணாதுரை பட ரிலீஸ் அன்று கமலா தியேட்டரில் சந்தித்தது. சுறுசுறுப்பான ஆர்வமான பண்பான தம்பி. இன்னும் நம்ப முடியவில்லை.

இப்போதெல்லாம் நாளிதழ்களில் விபத்துச் செய்திகள் அதிகமாக வருவதைக் கவனியுங்கள்.
நீங்கள் ஒழுங்காக விதிப்படி வண்டி ஓட்டிச் செல்பவராகவும் ஒருக்கலாம். ஆனால் உங்களுக்கு எதிரிலேயோ பின்னாலேயோ ஓட்டிவருபவர்கள் ஒழுங்காக ஓட்டிவரவில்லை என்றாலும் பெரும் ஆபத்துதான்.
உதவி ஒளிப்பதிவாளர்கள் 2 பேர் இறந்ததும் இப்படித்தான். ஒரு கார் எவர் மீதோ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த இவர்கள் மீது மோதியிருக்கிறது. சிகிச்சை பலனின்றி 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சாலையில் செல்லும் எல்லா சாமானிய மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஈடேறாத கனவுகள் லட்சக்கணக்கில் இருக்கிறது. ஆனால் யாரோ எவனோ வாழ்வில் துளியும் தொடர்பில்லாத ஒருவனால் இன்னொருவர் வாழ்வும் கனவும் இல்லாமல் பறிபோகிறது.
விபத்து, சாலை விதிகள், துரிதமான உடனடி மருத்துவம், கலப்பட உணவு, ரசாயன விவசாயம், வியாபாரமான கல்வி, ஆடம்பர வணிகமாகிப்போன அடிப்படை மருத்துவம், லஞ்ச ஊழலால் சீர்கேடடைந்த அரசு நிர்வாகம் & காவற்துறை, நம்பகமிழந்துவரும் நீதித்துறை, ஜாதி மத அரசியல், பணமோசடி ஏமாற்றல் என எல்லா வகையிலும் வாழ்வதற்கான தகுதியை மெல்ல மெல்ல இழந்துவரும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கும் இந்த நாட்டைத்தான் ஒப்படைத்துவிட்டுப் போகப்போகிறோம்.
வாழ்வதற்கான கதவுகளைவிடவும் மரணிப்பதற்கான கதவுகள் இந்தியாவில் அதிகம் திறந்து கிடக்கிறது.
எல்லா பிரச்சினைகளுக்காகவும் போராடிக் கொண்டிருப்பவர்கள்தான் ஒரே கடைசி நம்பிக்கை. ஏதோவொரு போராட்டக்குழுவுடன் கரம் கோர்க்காதவரையில் நாமும் ஆபத்துக்களை கண்டும்காணாமல் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம்.

25.12..2017




No comments:

Post a Comment