சீமானின் பல கருத்துக்களில் எனக்கு முரண்பாடு உண்டு. ஆனாலும் அவரது எல்லா கேள்விகளையும் புறந்தள்ளிவிட முடியாது. கருத்துக்களை கருத்துக்களால் பதில் தருவதை விட்டுவிட்டு அவரைத் தொடர்ந்து கிண்டல் செய்துகொண்டிருப்பது அருவெறுப்பானது. தமிழ்நாட்டின் மீதான அக்கறை என்பது அவரை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல.
ஆந்திர காடுகளில் தமிழர்களை சுட்டுக் கொன்றது, கர்நாடகாவில் தமிழர்களை கடந்த ஆண்டுகூட திட்டமிட்டு அடித்தது பேருந்துகளை எரித்தது போன்றதற்கெல்லாம் எந்த யோக்கியனும் இதுவரை நேர்மையான பதில் சொல்லவில்லை. அங்கே நியாயம் பேசுகிற எவனையும் காணோம். உபதேசம் எல்லாம் தமிழனுக்கும் தமிழ்நாட்டிலேயும்தான் தொடர்ந்து நடக்கிறது.
தமிழ்நாட்டில் ஜாதி வெறியும் மதவெறியும் மாய்ந்து தமிழன் என்ற இனவெறி புரையோடினால் ஒன்றும் கெட்டுப்போய்விடாது. ஏனெனில் தமிழன் அந்தளவுக்கு உலகளாவிய அளவில் கேட்பாரற்றுக் கிடக்கிறான்.
யார் எந்தக் கொள்கை பேசினாலும் கருத்துக்கு கருத்து வைப்பதைவிட்டு சீமானைத் தொடர்ந்து கிண்டல் செய்வதை மனநோயின் இன்னொரு அறிகுறியாகவே பார்க்கிறேன்.
இதுதான் என் கொள்கை என்று எப்போதே பேசிவிட்ட சீமானை மீண்டும் மீண்டும் நோண்டிக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? நெல்சன் சேவியரின் கேள்விகளில் பலவும் அடிப்படை நியாயமற்றது.
8 கோடி பேருக்காக சீமான் கவலைப்படுவதை விட்டுவிட்டு ரஜினிக்கும் ஏதோ ஒன்றிரண்டு தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களுக்காக அதீத கவலைப்பட வேண்டுமாம்.
8 கோடி பேர்களை அரசாள எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அதிகாரம் கொடுத்தது யார்? 8 கோடிப் பேர்களை எப்போது கேட்டார்கள்? சீமான் அக்கறைப்படுவது மட்டும் என்ன தவறு? ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் மக்கள் உள்ளபோது நெல்சன் மாதிரியானவர்களுக்கு ஏன் இவ்வளவு ஆவேச அக்கறை?
ஒரு வயதான தமிழ் ஓட்டுநரை கன்னடன் அடிக்கும் காணொளிக்கு எதிர்வினை ஆற்றியவர்கள் யாரோ அவர்கள் முன்வந்து ஆவேசமாய் சீமானின் கொள்கையை விமர்சியுங்கள்.
நெல்சனின் கேள்விகள் மட்டும் என்ன அப்படி பெரிய அறிவாளித்தனமாக இருந்தது?
No comments:
Post a Comment