4.6.21

இளையராஜா சொல்வதை நம்பினால் இதையும் நம்புங்கள்

போனவாரம் வாலாஜாபேட்டை சென்றிருந்தபோது காந்தி சிலை அருகே ஒருவர் எனை நோக்கி அழைப்பதைக் கவனித்தேன். அருகில் சென்றதும் ஆச்சர்யமாக இருந்தது. 5 வருடங்களுக்கு முன்னால் விபத்தில் இறந்துபோன பழைய நண்பன்தான் அவன்.

நரகம் எப்படி இருக்கிறது என விசாரித்தேன்.

பி.ஜே.பி & எடப்பாடி ஆட்சியில் நீங்கள் இருப்பதைவிட சௌகரியமாக இருப்பதாகவே தெரிவித்தான்.

நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

மோடியின் அலையால் எமலோகத்திலும் டிஜிட்டல் மயமாகிவிட்டதாம். மறுபடியும் இந்தியாவில் வந்து பிறக்க தற்போதைக்கு அவருக்கு எண்ணம் இல்லை என தெரிவித்தான். பேசிக் கொண்டிருக்கும்போதே எனக்குப் பின்னால் வரும் யாரையோ பார்த்து கை காட்டினான். யாரென்று திரும்பி பார்த்தேன். இறந்துபோய் "உயிர்த்தெழுந்த" யேசுவும் ரமணரும் இளையராஜாவின் பாடல் ஒன்றை சத்தமாய் பாடியபடி எதிர்புறமாக சாலையைக் கடந்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் வணக்கம் வைத்தேன். புதிய 2000 ரூபாய் நோட்டை நீட்டி என்னிடம் சில்லரை கேட்டார்கள். இல்லையென்றேன்.

'சாப்பிட வருகிறீர்களா?' என எங்கள் இருவரையும் அழைத்தார்கள். எனக்குப் பசியில்லை என்பதால் 'இல்லை' என மறுத்தேன்.

அவர்களுடன் செல்ல என் நண்பன் விடைபெற்றுக் கொண்டான். நானும் அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். வரும்போது மறக்காமல் 3 பேரின் தொடர்பு எண்ணும் வாங்கி வந்தேன்.
முட்டாள்கள் ஆளும் நாட்டிலிருந்து வருபவர்கள் மீது கருணை காட்டப்பட்டு நரகத்தில் தற்போது சிறப்புச் சலுகை தரப்படுகிறது என நேற்று அவன் 'வாட்ஸ் அப்' செய்திருந்தான். தொடர்ந்து சலுகை பெறுவதில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறதாம்.

"யேசு உயிர்த்தெழுந்தது பொய். ரமணர் உயிர்த்தெழுந்தது மெய்" என்று இளையராஜா கூறியிருந்தார். இளையராஜா சொல்வதையும் பைபிள் சொல்வதையும் நம்பினால் மேலே நடந்ததையும் தயவுசெய்து நம்புங்கள்.

28.03.2018

No comments:

Post a Comment