இட ஒதுகீட்டைப் பற்றிப் புரிந்துகொள்ள ஒரு அருமையான புத்தகம். விலை 10 ரூபாய் மட்டுமே.
இட ஒதுக்கீடு என்பது என்ன?
தீ விபத்து நடக்கிறது. அதில் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அப்போது யார் எந்தளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அதற்கேற்பத்தான் நிவாரணம் வழங்குவார்கள். பள்ளியில் ஜாதி அடையாளம் இப்படி நிவாரணம் வழங்குவது போன்றதுதான்.
யார் நெடுங்காலமாக எதனால் பாதிக்கப்பட்டார்களோ அதை அடையாளம் கண்டு ஏற்றம் பெற வழி செய்வதே இட ஒதுக்கீடு.
இது சலுகை அல்ல. உரிமை / நிவாரணம் / இழப்பீடு.
எல்லோரும் சமமாய் மதிக்கப்படும்வரையில் இது தொடருவதுதான் நியாயம். இது எப்போது நடக்கும்? முன்னேறிய அனைவருமே ஜாதி பேதம் பார்க்காமல் வாழத் தொடங்கும்போது. அந்த சூழல் வந்துவிட்டதா? இன்னும் இல்லை. இன்னும் நெடுங்காலம் ஆகும். அதுவரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்தான்.
முன்னேறியவர்கள் ஜாதியைப் பிடித்து தொங்கிக்கொண்டு தங்களுக்கோ பிறருக்கோ மீண்டும் விபத்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதற்குத்தான் ஜாதி ஒழிப்பு பிரச்சாரம்.
இரண்டையும் முரண்பாடாய் புரிந்துகொள்வது அறியாமை.
எவ்வளவு படித்த அறிவாளிகளும் இந்திய புண்ணிய நாட்டின் கடந்தகால & இன்னும் தொடரும் அநீதிகளைப் பற்றிய புரிதல்கள் இன்றி "இட ஒதுக்கீடு" என்றாலே வெறுப்பாய் பார்ப்பது பரிதாபமானது.
இட ஒதுக்கீட்டால் இந்தியாவில் திறமைக்கு மரியாதை இல்லை என்ற பொய் தொடர்ந்து பலராலும் சில ஊடகங்களாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் BC - 30%, MBC – 20%, SC – 18%, ST – 01% இதுதான் இட ஒதுக்கீட்டு கணக்கு. ஆனால் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி முதல் தலைமுறையாக படித்து வளரும் எல்லா சமூக இளைஞர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டிருப்பதாக சிந்திக்கவைக்கப் படுகிறார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் சொல்வது என்னவென்றால், இந்திய அளவில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு இன்னும் சரிவர முழுமையாக நடைமுறைப் படுத்தவில்லை என்பதுதான்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 69% வீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பிற மாநிலங்களில் 50% வீதம் மட்டுமே. அத்துடன் இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் தமிழகம் முதல் இடத்திலும் மகாராட்டிரம் இரண்டாம் இடத்திலும் தெலங்கானா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
சுதந்திர இந்தியாவில் 59 வருடங்கள் கழித்துதான் ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இன்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்களில் 15% வீதம் கூட மத்திய அரசு முழுமையாய் நிரப்பவில்லை என்பது அதிர்ச்சியான உண்மை. ஆனால்..,
இட ஒதுக்கீடு பற்றிய தவறான பரப்புரைகளால் BC-MBC-SC ஆகியோர் ஒருவருக்கு எதிராய் ஒருவர் தொடர்ந்து திட்டமிட்டு திருப்பிவிடப் படுகிறார்கள்.
No comments:
Post a Comment