முற்போக்கு அமைப்புகள் காவி பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் முஸ்லீம் அமைப்புகள் காவி பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது.
தஸ்லீமா நசுரீன் அவர்களை அழைத்து வந்து தமிழ்நாட்டில் கூட்டம் நடத்தினால் முற்போக்கு அமைப்புகளுடன் ஜோடி சேரும் முஸ்லீம் அமைப்புகளின் முகத்திரை விலகிவிடும்.
பழைய திராவிட கட்சிகள் செய்த அதே பாணி அரசியலை முன்னெடுக்காமல் எல்லா மத அடிப்படைவாத அமைப்புகளையும் தனிமைப்படுத்துங்கள். தோழர் பாரூக் மாதிரியான முஸ்லீம் நாத்திகவாதிகளுக்கு துரோகம் இழைக்காதீர்கள்.
அநீதிகளுக்கு எதிராகத்தான் குரல்கொடுக்க வேண்டுமே தவிர மத சிறுபான்மை என்பதெல்லாம் அளவுகோல் இல்லை.
ஹிந்து முஸ்லீம் இரு மத அடிப்படைவாதிகளும் ஒருவரைச் சார்ந்து ஒருவர் காரணம்காட்டி தங்களை வளர்ந்துகொள்கின்றனர். அடுத்த தலைமுறை இளைஞர்களின் சுயசிந்தனையை கெடுக்கிறார்கள்.
முஸ்லீமில் கிறித்தவர்களில் பல்லாயிரம் நாத்திகர்கள் வளர வேண்டும். இதற்கு முட்டுக்கட்டை போட்டு முஸ்லீம் அடிப்படைவாதக் குழுக்களுக்கு முட்டுக்கொடுக்காதீர்கள்.
மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் முற்போக்கு அமைப்புகளுடன் கைகோர்க்கும், மதத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் அமைப்புகளிடமும் தலைவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திராவிட முற்போக்கு இயக்கங்களின் முற்காலத்திய இவ்வாறான அணுகுமுறைகள்தான் தமிழ் மண்ணில் காவி வளரவும் ஒரு காரணமாக இருக்கிறது.
சிறுபான்மை மக்களிடம் கம்யூனிசமும் முற்போக்குக் கருத்துக்களும் பரவுவதற்கு இம்மாதிரியான மத அமைப்புகளே தடையாய் இருக்கின்றனர்.
காதலர் தினத்தை காவி பயங்கரவாதிகள் எதிர்ப்பதை நாம் கண்டிக்கிறோம். காவிகளை எதிர்க்கும் இந்த முஸ்லீம் மத அமைப்புகள் அதேபோல் காதலர் தினத்தை எதிர்க்கும் பச்சை பயங்கரவாதிகளை கண்டிக்கிறார்களா என்பதை கவனியுங்கள். இவர்களின் தேவையெல்லாம் தம் மக்களிடம் முற்போக்கை விதைப்பதல்ல. காவிகளை எதிர்க்க கூட்டணி வேண்டும் என்பது மட்டும்தான்.
தயவுசெய்து இனி முற்போக்கு மேடைகளில் மதவாதிகள் எவருக்கும் இடம் தராதீர்கள்.
24.03.2018
No comments:
Post a Comment