4.6.21

ஐ.ஏ.எஸ் - பில்டப் செய்திகள்

கலெக்டர்னா குனிஞ்சி கும்புடனும், எவன் போராடுனாலும் தடுக்கனும், ஆளுங்கட்சிக்கு சொம்படிக்கனும், கமிஷனை ரகசியமா வாங்கிக்கனும், சொத்துமேல சொத்து குவிக்கனும், கடவுள் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்துக்கனும், ஏழைபாழைகளை பயப்பட வைக்கனும், தன் கார் கதவக்கூட தானே திறந்துக்காம இருக்கனும், அப்படித் திறந்துகிட்டா கௌரவக் குறைச்சல், இல்லேன்னா அதுவும் தலைப்புச் செய்தி, சைக்கிள்ல போனா நியூஸ், ரெய்டுக்குப் போனா வெளம்பரம்...

கலெக்டர்னா என்ன கடவுளா...? எதுக்குய்யா இந்த பதவிக்கு போறவனுக்கெல்லாம் இவ்ளோ பில்டப் குடுக்குறீங்க? இவ்ளோ அறிவாளியா தேர்வெழுதி பதவிக்கு போனவன்ல ஒரு 50 பேராவது அரசியல்வாதிகளுக்கு பயப்படாம அறிவாளித்தனமா ஒரு மாவட்டத்தை உயர்த்துன வரலாறு ஏதும் இருக்கா?
இப்ப எந்த மாவட்டம் 100% வீதம் மேம்பாடு அடைஞ்சிருக்கு? இவங்க கலெக்டர் ஆவுறது தவறில்ல. இப்படி பில்டப்பா செய்தி பரப்புறதுதான் பிரச்சினை.
"சாதாரண வீட்ல பொறந்த எடப்பாடி பழனிச்சாமி இன்னைக்கு முதல்வர் அளவுக்கு உயர்ந்திருக்காரு..."
இப்படித்தான் இதுவும்.

24.03.2018



No comments:

Post a Comment