17.6.21

திமுக அதிமுக கங்காணிகள்

தமிழர்களின் சுயமரியாதையை டெல்லிக்கு அடகு வைக்கும் திமுக, அதிமுக கங்காணிகள்.

ஆளே இல்லாத காங்கிரசுக்கு பல தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து அவர்கள் தயவில் ஆட்சி நடத்திய கலைஞர், தன் கடைசி பதவிக் காலத்தில் காங்கிரசுக்கு காவடி எடுக்க பல பிழைகள் செய்தார். அதிலொன்று சென்னை பொது மருத்துவமனைக்கும் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் ராஜீவ்காந்தியின் பெயரை சூட்டியது. இதேவழியில் ஸ்டாலின் அவர்களும் ஆளே இல்லாத காங்கிரசுக்கு 10 பாராளுமன்ற தொகுதிகளை தற்போது ஒதுக்கிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிமுக அடிமைகள் ஆட்சியில் நடக்கும் இன்னொரு அவலம் மதுரை பேருந்து நிலையத்திற்கும் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கும் எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்படுவது. போன தலைமுறையிலேயே தமிழர்கள் நிறைய ஏமாந்துவிட்டனர் எம்.ஜி.ஆர்-யிடம். இன்னும் ஏன் எதிர்பார்க்கிறார்கள்...?

07.03.2019



No comments:

Post a Comment