17.6.21

பொள்ளாச்சி பாலியல் மிரட்டல் - சில சந்தேகங்களும் கேள்விகளும்

1. இதுவரையிலான விசாரணையின் முழு விவரத்தில் போலிஸ் தரப்பில் தடுமாற்றமான விவரங்கள்

2. பொள்ளாச்சி ஜெயராமனின் இரு மகன்களுடைய முகநூல்களும் திடீரென நேற்று மூடப்பட்டது ஏன்?
3. குற்றவாளிகளின் பின்னணியில் யார் யார்? 7 ஆண்டுகளாக இவர்களுக்கு தைரியம் த்ந்த அதிகாரம் எது?
4. பார் நாகராஜன் அதிமுக கட்சியை விட்டு நீக்கியும் அவன் மேல் வழக்கு பதியப்படவில்லை ஏன்? இப்போது வெளிவந்துள்ள அவனது நிர்வாண காணொளியை இதுவரை போலிஸ் மறைத்தது ஏன்? அல்லது இதுவரை பார்க்கவில்லையா?
5. வேறு யாருக்கும் தொடர்பில்லை என்று SP பொய் சொன்னது ஏன்?
6. இத்தனைப் பெண்களும் அரசியல்வாதிகளுக்கும் பணக்கார வீட்டு பையன்களுக்கும் பலியாக்கப்பட்டிருக்கலாம். அரசியல்வாதிகளின் முழுப்பின்னணி எப்போது வெளியே வரும்?
7. புகார் கொடுத்த பெண்ணின் விவரத்தை போலிஸ் வெளியிட்டது ஏன்? பிற பெண்கள் புகார் தர வந்துவிடக் கூடாது என்ற மறைமுக மிரட்டலுக்கா?
8. குற்றவாளிகளே குற்றத்தை ஒப்புக்கொண்டும் போலிசார் தாமாக வந்து முட்டு கொடுப்பது ஏன்? விசாரணை முடிந்ததாக சொன்னது ஏன்?
9. இதேபோன்று மாணவிகளை சீரழித்த தரகர் நிர்மலாதேவி விசாரணையும் இழுத்தடிக்கப்படுவது ஏன்?
10. காவல்துறையில் நடக்கும் பாலியல் முறைகேடுகளுக்கு இதுவரையில் யாரேனும் தண்டிக்கப்பட்டதுண்டா?
11. உ.பி-ல் ஒரு எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்ணின் தந்தையை அங்கேயே ஆள்வைத்து கொன்றனர். பொள்ளாச்சியிலும் புகார் கொடுத்த பெண்ணின் குடும்பத்தினரை அடித்துள்ளனர்.
12. ஆட்டோ சங்கர் பாணியில் கீழ்ப்படியாமல் எதிர்த்த பல பெண்கள் கொல்லப்பட்டனரா?
13. கடந்த 7 ஆண்டுகளில் பொள்ளாச்சி வட்டாரத்தில் எத்தனை பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்?
14. கடந்த மாதத்தில் மட்டும் அப்பகுதியில் 7 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறதே. அதன் விசாரணை விவரங்கள் என்ன? காவல்துறை வெளியிடுமா?
15. தற்போதைய குற்றவாளிகள் மீதான FIR மறைக்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கிறது. ஏன் மறைக்கப்பட்டது?
16. போலிஸ் விஜயலட்சுமி, கருவறை தேவநாதன், தருமபுரி பைனான்சியர், நந்தினி, ஆசிரியர் பயிற்சி மாணவிகள் கொலை என்று இதுவரை ஏதேனுமொரு பாலியல் பலாத்கார குற்றவாளிகளாவது வலுவாக தண்டிக்கப்பட்டது உண்டா? புகார் தர வந்த பெண்களிடம் பாலியல் அழைப்பு விடுத்த போலிசார்களாவது?
17. ஒப்புக்கொண்ட குற்றவாளிகளின் விசாரணையை வெளியிட இவ்வளவு நாட்கள் போலிஸ் இழுப்பது ஏன்? யாரைக் காப்பாற்ற?
18. அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதாகவும் ஸ்டாலின் காப்பார்ற வேண்டும் என்றும் குற்றவாளியே சொல்லியிருக்க SP இதற்கு மாறாக பொய் சொன்னது ஏன்?
19. போராடும் மாணவர்களை ஒடுக்க முனையும் காவல்துறை அதிகாரம், குற்றத்தரப்பு அரசியல்வாதிகளின் முன்னால் பம்முவது ஏன்?
20. இன்று புதிதாய் புகார் கொடுக்க வந்த பெண்ணை போலிசார் நாள் முழுக்க காக்க வைத்து அலைக்கழித்த காரணம் என்ன?
21. இதை பொதுமக்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் புகார் கொடுத்த பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேர்ந்திருக்கும் கதி என்ன?
22. ஏழு ஆண்டுகளாக இக்குற்றங்கள் தொடர்ந்தும் காவல்துறைக்கு தெரியாதது எப்படி? குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது பயமில்லாமல் போனது எப்படி? பாதிக்கப்பட்ட பெண்கள் போலிசிடம் வர பயப்படுவது ஏன்? யாரும் புகார் கொடுக்காதது ஏன்? காவல்துறை மீதான பெண்களின் பயத்திற்கும் நம்பிக்கையற்ற தன்மைக்கும் வெட்கப்பட வேண்டியது யார்?

14.03.2019






No comments:

Post a Comment