17.6.21

செய்தியைப் பகிர்வதில் கவனிக்கவேண்டியது

நாட்டில் அநீதி நடக்கும்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் ஜாதியோ மதமோ வெளியாகாதவரையில் பொதுமக்களும் இளைஞர்களும் மாணவர்களும் கொந்தளிக்கிறார்கள். அவர்களின் ஜாதி மதம் தெரிவித்து நியாயம் கேட்கும்போது ஆதரவு சிதறுகிறது. சமூகத்தில் பாதிக்கப்படும் அனைவரையும் சக மனிதர்களாக பாவித்து நீதி கேட்பதுதான் நீதி கிடைக்க ஒரே வழி. கடந்த காலங்கள் வெளிப்படுப்படுத்தும் படிப்பினை இது.

அதிகாரத்தாலோ பணபலத்தாலோ ஜாதிபலத்தாலோ யாரேனும் பாதிக்கப்பட்டால்; உண்மையிலேயே நீதியை எதிர்பார்த்தால்; பொதுமக்களின் கவனம் சிதறாதபடிக்கு இனிமேல் பரப்புரை செய்வதே நல்லது.

13.03.2019

No comments:

Post a Comment