16.6.21

இந்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானுக்கும் இம்ரானுக்கும் ஆதரவாய் பெரும்பாலோர் அறிவிக்கப்படாத PRO மாதிரி எழுதுகிறார்கள்.

பாகிஸ்தானுக்குள் இயங்கும் தீவிரவாத முகாம்களை ஒழிக்க இவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? (ஆட்சிக்கு வந்து 100 நாட்கள்தான் ஆகிறது) அங்கு தீவிரவாதப் பயிற்சி முகாம்களே கிடையாது என்கிறாரா?
காஷ்மீருக்கு விடுதலை கேட்பதாக பரப்பப்படும் தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு & சீன ஆக்ரமிப்பு பகுதிகளில் குண்டு வைப்பதில்லையே ஏன்? இந்தியப் பகுதிகளில் மட்டுமே தாக்குதல் நடத்தப்படுவது எப்படி?
பாகிஸ்தான் உதவி இல்லாமலா இதை அவர்களால் செய்ய முடிகிறது?
விமர்சன சுதந்திரமின்றி மதத்தின் பேரால் மக்களை மந்தைகளாக்கி வைத்திருக்கும் மோசமான நாடுதான் பாகிஸ்தான். திடீரென ஒரேநாளில் மாறிவிடுவது எப்படி?
பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இருக்கிறது என்று சொல்லும் இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு நேர்மையாளர் இம்ரான்கான் என்ன செய்ய வேண்டும்? சர்வதேச ஊடகத்திற்கு அழைப்பு விடுத்து அங்கு இல்லை என்பதை வெளிப்படையாக நிரூபித்து இந்தியாவின் முகத்தில் கரியைப்பூச முன்வரலாமே.
பாகிஸ்தானில் இயங்கிய தீவிரவாத முகாம்கள் திடீரென காணாமல் போய்விடுமா? அல்லது தற்போது திடீரென திருந்திவிட்டார்களா?

27.02.2019



No comments:

Post a Comment