ஜாதிவெறி பேசுவோர், பிறருடன் பகை மூட்டுவோர், மேடையில் உணர்ச்சியூட்டுவோரெல்லாம் தலைவரில்லை. தாம் சார்ந்த மக்களின் அரசியல் அறியாமையை போக்க போராடவும் நல்வழி நடத்தவும் பிரச்சினைகளுக்கு சுமூகமான நல்வழிகாட்டி தம் வாழ்வை அவர்களுக்காக அர்ப்பணிப்பவர்களே தலைவர்கள். மாறாக இதற்கு பலனாக அம்மக்களை பயன்படுத்திக்கொள்பவர்களல்ல.
இவர் பாடுபடுவதாகச் சொல்வது தமிழகத்தில் வாழும் யாதவர்களுக்காக என்று, ஆனால் கட்சியின் பெயரோ, "இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்". ஒருவேளை இது educational trust ஆகவும் இருக்கக்கூடுமோ என்னவோ...!
24x7 நேரமும் கிருஷ்ணன், பகவத் கீதை, கோமாதா என்று பா.ஜ.க-வின் அறிவிக்கப்படாத ஊதுகுழலாகவே பேசி வந்தார். தேர்தல் வரும்போது இவரை யாரென்று பா.ஜ.க-வுக்குத் தெரியவில்லை.
சொற்ப தொகையிலான வேற்றுமொழி சமூகமெல்லாம் அரசியலில் முன்னேறி வருகிறார்கள். இவர்களோ தங்கள் சமூகத்தின் மேல் சாதுரியமாக மதத்தை காப்பாற்றும் வேலையை மட்டுமே கச்சிதமாக தொடர்ந்து சுமத்துகிறார்கள்.
தயவுசெய்து ஜாதி, மதம் கடந்து பொது சமூகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் தலைவனாகும் எண்ணத்துடன் செயலாற்றும் & சிந்தனையை விதைக்கும் நல்ல தெளிவான பார்வையுள்ள அரசியல்வாதி இருந்தால் அவரைப் பின் தொடருங்கள். பிடித்த கட்சியில் இணைந்து பிரதிநிதித்துவம் கேளுங்கள்.
தயவுசெய்து தம் வளர்ச்சிக்கு அப்பாவிகளின் அறியாமையை பேரம் பேசி அரசியல் நடத்தவருபவர் பின்னால் போகாதீர்கள். இப்படியான எல்லா சமூக இளைஞர்களின் அறிவும் வளர்ச்சியும் முட்டுச்சந்தில்தான் வந்து நிற்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலுமா ஒவ்வொருவரை நம்பி சூடு போட்டுக்கொள்வது?
இன்றைய சூழலில் துளியும் அரசியல் ஆளுமைகள் இல்லாத சமூகமாக இது இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தாம் சார்ந்த கட்சிகளில் பிரதிநிதித்துவம் கேட்கவும் முடியாத இச்சமூகத்தை வைத்து தனியாக சேர்த்து ஜாதி அரசியல் நடத்துவது என்பது எப்பேர்ப்பட்ட தற்கொலை?
No comments:
Post a Comment