நெருங்கிய உறவினர் ஒருவர் மறைந்ததுபோல் உணர்கிறேன்.
எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதைகளில் "குமாரசாமியின் பகல்பொழுது" என்ற கதை எப்போதும் நினைவிலாடும்; வாழ்வைப் பற்றின ஆழமான ஞானம் வழிந்தோடும் சிறுகதை. சமீபத்தில் நான் படித்த "பிரபஞ்சனின் மகாபாரதம்" மிக அற்புதமான புத்தகம். மகாபாரதத்தில் இதுவரை கேள்விப்படாத பல பின் கதைகளை எளிமையாக இணைத்து சுவையாக எழுதியிருந்தார். ஒரு படைப்பாளியின் முழு கற்பனை சுதந்திரத்தை மதவுணர்வு கலவாமல் அழகாய் பதிவு செய்த புத்தகம் அது.
No comments:
Post a Comment