குற்றவாளியான பாரபாஸை பத்கா பண்டிகைக்காக விடுவித்து அவனுக்குப் பதிலாக யேசுவை சிலுவையில் ஏற்றுகிறார்கள் யூத அரசவையினர். இதனால் பழைய குற்றவாளியான அவனை ஊரே இன்னும் பாவி என்று தூற்ற, வேண்டா வெறுப்பாய் யேசு யார்? அவர் அப்படியென்ன தன்னைவிட மேலானவர் எனத் தேடத்துவங்கி அவரது செயற்பாடுகளை எல்லாம் விசாரிக்கிறான். அவரது செயல்களைப் பற்றி ஊரார் சொல்லும் சம்பவங்களால் கவரப்படுகிறான். எல்லோருடைய பாவத்திற்காகவும்தான் சிலுவையை ஏற்றதாய் யேசுவின் தியாகத்தைப் பற்றி ஊர் சொல்வதை அறிந்து, இறுதியில் தன்னைவிட யேசு நல்லவர்தான் என்று ஏற்கிறான். கடைசியில் தனக்குத் தொடர்பில்லாத குற்றத்திற்காக கிறித்தவன் என்று குற்றம் சாட்டப்பட்டு யூதத் தரப்பினரால் கொல்லப்படுகிறான் பாரபாஸ்.
No comments:
Post a Comment