5.6.21

சீர்கெடும் த.நா.காவல்துறை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் வேலை செய்யும் காவல் துறை அதிகாரி நடராஜன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்க வரும் பெண்களிடம் செல்போன் நம்பர் கொடுத்து வரச்சொல்லி மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்டதை அப்பகுதி பொதுமக்கள் சார்பாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அந்த வீடியோ வாட்சப்பில் வந்தது. பார்க்கவே கொடூரமாக உள்ளது. பாவம், அப்பெண்ணை முட்டாள்த்தனமாக வீடியோ எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் போலிஸ் காலில் விழுந்து அரையாடையுடன் கதறுகிறார். அவனுக்கோ சிறிதும் குற்ற உணர்ச்சியே இல்லை. முழுமையாகப் பார்க்க முடியவில்லை.
அதிகாரமுள்ள காவல்துறையினர் மட்டும் ஏன் எதற்கும் பயப்படுவதில்லை? அதிகாரத்தில் இருப்பவர்களெல்லாம் இப்படி அநியாயம் செய்தால் அரசு என்பது எதற்கு? காவல்துறையை நம்பி புகார் கொடுக்க செல்லும் எளிய பெண்களின் பாதுகாப்பு?...

06.05.2018



No comments:

Post a Comment