புத்தரை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று பல திட்டங்களைத் தீட்டினான் அவருடனே இருந்த தேவதத்தன். இறுதியில் 500 துறவிகளை பிரித்துக்கொண்டு தனியாகச் சென்றான்.
எப்படியாவது மகாவீரரைக் கொன்றுவிட வேண்டும் என்று கோசலா என்கிற அவரது சீடனும் அதேபோல் முயன்றான். மகாவீரரைப் பற்றி பல அவதூறுகளைப் பரப்பினான். அடுத்த 6 மாதத்தில் தானாய் அவன் இறந்து போனான்.
30 வெள்ளிக் காசுக்காக யேசுவைக் காட்டிக் கொடுத்தான் அவருடனே இருந்த யூதாஸ். இறுதியில் குற்ற உணர்வில் தானாக உயிரை விட்டான்.
பதவி கொடுத்த ஜூலியஸ் சீசரையே கொன்றான் அவருடனே இருந்த புரூட்டஸ்.
மாலிக் ஜீவன் என்பவனை யானை மிதித்துக் கொல்லும்படி மரண தண்டனை விதிக்கிறார் ஷாஜஹான். தன் அன்பு மகன் தாராவின் வேண்டுதலுக்கு இணங்கி மாலிக்கை மரணத்திலிருந்து விடுவிக்கிறார் ஷாஜஹான். ஷாஜஹானுக்கு எதிராக ஔரங்கசீப் கிளர்ச்சி செய்தபோது, மாலிக்கிடம் தஞ்சம் புகுகிறான் தாரா. ஆனால், தாராவை ஔரங்கசீப்பிடம் காட்டிக் கொடுத்து அவமானத்தால் அவன் சாகும்படி செய்தான் மாலிக்.
இன்னும்....
"துரோகச் சுவடுகள்" - வெ. இறையன்பு
No comments:
Post a Comment