தேர்தல் என்பது தங்கத்தால் செய்யப்பட்ட அடிமை விலங்கு. முதல்வர் பதவி என்பது ஒரு அடிமைப் பதவி.
ஈழப்போரின்போது அதிகாரம் வைத்திருந்த தமிழர்களாலும் எதுவும் செய்யமுடியவில்லை என்பது தெளிவான உதாரணம். யார் வந்தாலும் உண்மை இதுதான். கலைஞரும் ஜெயாவும் எம்.ஜி.ஆரும் தாங்கள் அட்டைக்கத்திகள் என்பதை புரிந்துகொண்டும் மக்களிடம் மன்னர்களைப்போல நடித்தவர்கள். தனிநாடாக இருந்திருந்தால் உலகில் தமிழ்நாடு குறிப்பிட்டு சொல்லும் நாடாக இருந்திருக்கும். அந்த எண்ணத்தை வரவிடாமலே ஏமாற்றும் பதவிதான் முதல்வர் பதவி என்பது. டெல்லிக்கும் ஹிந்திக்காரர்களுக்கும் எப்போதும் அடிபணிந்து கிடப்பதுதான் தமிழகத்தின் சென்னையின் விதி. இந்தப் பதவிக்கு நான் வந்தால் இப்படிச் செய்வேன் அப்படிச் செய்வேன் என்று யார் சொன்னாலும் இன்னொரு ஏமாற்றுத்தனம்தான். அரசியல் புரிந்தோர்க்கு மட்டும் இது புரியக்கூடும்.
EPS & OPS இருவரும் இந்த உண்மையை தமிழ் மக்களுக்கு நேர்மையாக உணர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். முன்னவர்களைப்போல இதில் மக்களை ஏமாற்றவில்லை.
புரிந்தவர்கள் நிரந்தரத் தீர்வுக்கு குரல் கொடுப்பதுதான் நியாயமானது.

No comments:
Post a Comment