ஆங்கிலேய ஆட்சியில் நடத்தப்பட்ட ஜாலியன் வாலா பாக் படுகொலைகள் போன்று தற்போதைய கார்ப்பரேட் தரகர்களால் கடந்த ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டது தூத்துக்குடி படுகொலைகள்.
8 கோடி மக்களை ஆள மட்டும் எத்தனை கட்சிகள், எத்தனை தலைவர்கள்? ஆனால் நீதி பெற்றுத்தரவோ நியாயம் கேட்கவோ ஒருவருக்கும் வலுவில்லை; திறமில்லை; எண்ணமில்லை; விருப்பமில்லை.
துணிச்சலாய் உண்மையை வெளிக்கொணர்ந்த முகிலனுக்கு குரல் கொடுக்கவும் ஆளில்லை. இவர்கள்தான் டெல்லியின் திமிரை எதிர்த்து நின்று தமிழர்களையும் தமிழ் மண்ணையும் காக்கப் போவதாய் வாக்குகளை மட்டுமே குறி வைத்து வார்த்தை ஜாலம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எண்ணிக்கையில் சொற்ப அளவில் இருக்கும் தேர்தல் சாராத முற்போக்கு இயக்கங்கள்தான் இங்கு கார்ப்பரேட்களுக்கும் தரகு அதிகார வர்கத்திற்கும் தொடர் சவாலாய் இருக்கிறது. எண்ணிக்கை அதிகளவிலான எல்லா கட்சிகளும் கார்ப்பரேட் முதலாளிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மக்களை கட்டுப்படுத்தித்தான் வைத்திருக்கிறது.
தேர்தல் கட்சிகளுக்கு எந்நேரமும் விவாதம் செய்து முட்டு கொடுப்பவர்கள் இச்செய்தி குறித்து கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment