இராமநாதபுரம் அருகே பாப்பாக்குடியில் அருந்ததியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்னெடுங்காலமாக பரம்பரை பரம்பரையாய் மிகவும் நசுக்கப்படும் ஒரு சமூகம் அருந்ததியர் சமூகம். அவர்களை அடக்க வேண்டும் என்று தாக்குகிறவர்கள் மிகக் கேவலமான கோழைகள். அவர்கள் எம்மொழி பேசினால் என்ன? இந்த மண்ணில் அவர்கள் பல தலைமுறைகளாய் சுரண்டப்பட்டவர்கள். பண்பற்று அதிகம் எழுத விரும்பவில்லை, அருந்ததியர்கள் மீதான தாக்குதலை யாராவது ஆதரித்தால் அவன் ஒரு மனசாட்சியற்ற மிருகம்.
பட்டியல் ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 03% உள் ஒதுக்கீடு வழங்கியது கலைஞரின் பாராட்டுக்குரிய சீரிய சாதனை. இதனால்தான் இச்சமூகம் ஓரளவு தலைநிமிர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment