5.6.21

Get Out கவர்னர் தாத்தா புரோஹித்

கடந்த 13 ஆம் தேதி அன்று திருவையாறு அருகே கல்யாணபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சீனிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை விழாவில் மாணவி இருவருக்கு சால்வை அணிவித்த ஆளுநர், அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்து அவர்கள் மீது கை வைத்தார். ஆளுநரின் இந்த செயல் அந்த நேரத்தில் சாதாரணமாகத்தான் தெரிந்தது. ஆனால், பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தடவியதும், நிர்மலா தேவி விவகாரம் வெளிவந்த பிறகும்தான் எப்போதுமே அநாகரீகத்துடன் ஆளுநர் நடந்து கொண்டுள்ளார் என்பது தெரியவருவதாக சமூக ஆர்வலர் பனசை அரங்கன் போன்றோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து இப்படி அநாகரீகமாக பெண்களை நடத்தும் இந்த கவர்னர் தாத்தாவை இந்திய மக்கள் அனைவரும் அறியவும் இதைப் பகிருங்கள்.
மேலும் நிர்மலாதேவி கைதுக்குப் பின்னர் இதுவரை என்ன விசாரிக்கப்பட்டது என்பதை பொதுமக்களை மதித்து உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்றும் மாணவர்கள் / பெற்றோர்கள் சார்பாக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

20.04.2018




No comments:

Post a Comment