நெசப்பாக்கம் விநாயகர் கோயில் பின்புறம் இயங்கும் ஒரு அரசு தொடக்கப் பள்ளி எதிரே இருக்கும் பொது இடத்தில் அரசு அலுவலர்களே சுவரை இடித்து குப்பை கொட்டி சேகரித்து வந்தனர். இது தொடர்பாக நேற்று சென்னை மாநகராட்சிக்கு முறையீடு செய்திருந்தேன். இன்று தொடர்பு கொண்டு இனி அங்கு குப்பை கொட்டப்படாது என்றும் இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரை 10 நாட்களில் கட்டிவிடுவதாகவும் மாநகராட்சி சார்பில் உறுதியளித்துள்ளார்கள். அந்த இடத்தை தூய்மைப்படுத்தி பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாடும் இடமாக சீர்படுத்தித் தருமாறும் கோரியிருக்கிறேன்.
03.12.2019



No comments:
Post a Comment