தமிழக முதல்வர் / துணை முதல்வர் என்றால் தமிழ்நாட்டில் வாழும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, இங்கு வாழும் எல்லா உயிர்களைப் பற்றியும்தான் அக்கறைகொண்டு திட்டம் இயற்ற வேண்டும். கொள்ளையடிப்பது, மக்களையும் ஊடகங்களையும் மிரட்டுவது, விலைக்கு வாங்குவது, வழக்கிலிருந்து தப்பிக்க மட்டுமே செயல்படுவது, கோயில்களுக்குப் போயும் நன்கொடை கொடுத்தும் பாவங்களை சரிகட்டுவது, வாரிசுகளை வளர்த்துவிடுவது, சொத்து சேர்ப்பது என்று மட்டும் வாழும் ஜந்துக்கள் எல்லாம் அரசு பதவிக்கு வந்தால் இந்த மண்ணில் வாழும் யானைகளும் மான்களும் குடிக்க தண்ணீரின்றி சாவதைப்பற்றி எப்படி யோசிப்பார்கள்?
மழை வெள்ளத்தை சேமிக்கும் அறிவுத்திறன் இன்றி தண்ணீரை விற்று லாபம் பார்க்கும் பூமியாக இது மாறிப்போனது என்பதை அடுத்ததாக சாகப்போகும் வனவிலங்குகளுக்கு யார் எப்படி சொல்லி எச்சரிப்பது?
No comments:
Post a Comment