தமிழன் என்று சொன்னால் மட்டும் உடனே மொத்தபேர் மீதும் ஜாதிவெறி போர்வை போர்த்த ஒரு கூட்டமே தயாராக இருப்பதுபோல் தெரிகிறது. இவர்களெல்லாம் யார்? ஜாதி தமிழ்நாட்டில் மட்டுமா இருக்கிறது? ஜாதியை விட்டுட்டு தமிழனாக ஒன்று சேருங்கள் என்ற பரப்புரையில் என்ன குற்றம்? இவர்களுக்கு இதில் என்னதான் பிரச்சினை?
தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் அதிகம் குழப்பம் ஏற்படுத்துவது யாரென்று கவனித்தால் தமிழர் போர்வையில் ஒளிந்துகொண்டிருப்பவர்கள்தான். அதிலும் முற்போக்கு கூடாரத்தில் மறைந்திருப்பவர்களதான். இவர்களால்தான் இங்கு செயல்படும் எல்லா முற்போக்கு இயக்கங்களும் காயடிக்கப்படுகிறது என்பது ஆழ்ந்து கவனித்தால் புரியும்.
தமிழர்கள் மாறவேண்டும் என்ற நோக்கமோ மாற்றத்திற்கு உழைப்பதோ இவர்களுக்கு நோக்கமில்லை. மாறாக எல்லாவற்றுக்கும் எப்போதும் தமிழர்கள் மீது ஏதாவது குறைசொல்லிகொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
No comments:
Post a Comment