குறைந்தபட்சம் ஒரு 2 MLA, 1 MP வரக்கூட கிருஷ்ணன் உதவ மாட்டார். மொத்தம் 25 க்கும் மேற்பட்ட அமைப்புகள். இருந்தும் தேர்தலில் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனாலும் wanted ஆக ஓடிப்போய் யாரையேனும் ஆதரித்து அறிக்கை விடுவது. அரசியல் உணர்வு வரவிடாதபடி முழுநேரமும் கிருஷ்ணன் புகழ்பாட இளைஞர்களை மூளை சலவை செய்வது. மத அரசியலுக்கு அடியாள் வேலை பார்ப்பது. அரசியலில் யாரும் வரமுடியவில்லையே என எப்போதும் தாழ்வு மனப்பான்மையில் குறைபட்டுக் கொள்வது. தோதாக காந்தாரி சாபம் என்று கதை அளப்பது.
அரசியல் என்றால் ஆயிரம் கருத்து இருக்கும். இந்த அரசியல் புரிதலுக்குக்கூட வழிகாட்ட ஆளில்லை.
கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி இழிவுபடுத்திவிட்டாராம். புராணங்களை எல்லாம் கி.வீரமணியா எழுதினார். புராணங்களில் இல்லாததையா கி.வீரமணி சொல்கிறார்.
இப்படி எழுதி வைத்தவன் யார்? ஏன்? என்று எப்போதும் யாரும் சிந்தித்ததாய் தெரியவில்லை. அவர்கள்மேல் கோபப்படும் அளவுக்கு சிந்தனை இல்லை. யாரோ சீண்டிவிட்டால் அடியாளாய் செயல்பட மட்டும் ஆயிரக்கணக்கானோர்.
கிருஷ்ணர் என்பவர் ஹிந்து மதக் கடவுள். ஒரு கடவுளையே இப்படி எழுதியிருக்கிறார்களே என்று அறிவுள்ள யாரும் சுட்டிக் காட்டுவது சாதாரண இயல்பு. விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு. கோபப்படுவதென்றால் இப்படி எழுதியவன் மேல்தான் முதலில் கோபப்பட வேண்டும். "அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள், நீ மட்டும் சுட்டிக் காட்டிப் பேசக்கூடாது" என்றால் இது என்னவகை எதிர்ப்பு? சுயசிந்தனையானதுதானா?
கிருஷ்ணர் யாதவர் என்பதற்காக சுட்டிக்காட்டியா வீரமணி இழிவுபடுத்தினார்? கிருஷ்ணரைப் பற்றி 'ஏன்டா இப்படி எழுதி வெச்சிங்க?' என்று கேட்க ஒரு தலைமுறையில் கூடவா ஆளில்லை?
கி.வீரமணியை எதிர்ப்பது இருக்கட்டும். அந்தந்த பகுதியில் வாழும் இளைஞர்களை மத அடிமைகளாக்காமால் முதலில் சுயமாய் அரசியலில் வளர வழிவிடுங்கள்.
மொத்த ஜாதியையும் ஒருவரே குத்தகை எடுத்ததுபோல் பேசுவதை கைவிடுங்கள். அடுத்த தலைமுறை அப்பாவி மக்களின் வளர்ச்சியிலும் முட்டுக்கட்டை போடாதீர்கள்.
ஜாதி மக்களை வைத்து பிழைப்பு நடத்தி நிரந்தர அரசியல் அடிமைகளாக்கும் பிற ஜாதி முட்டாள் சுயநல தலைமைகளை உதாரணமாக எடுத்துக்கொண்டு ஒரே தலைமை, ஒரே கருத்து என்று சீரழிவுக்கு அடிகோலாதீர்கள்.
மக்களின் பிரச்சினைக்கு மட்டும் குரல் கொடுங்கள். போராடுங்கள். அடியாள் mode-லேயே இருக்காதீர்கள். அடுத்த வளர்ச்சிக்கு நகருங்கள்.
முக்கியமாக தயவுசெய்து கீழே வந்து அநாகரீகமாக கருத்திடாதீர்கள்.
No comments:
Post a Comment