ஆடு மாடு மேய்ப்போர் நாய்களா?
அறியாமையில் இருக்கும் மக்களிடம் எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். அப்படி எடுத்துச் சொல்ல துளி ஆர்வமும் இல்லாமல் இப்படி சுயஜாதி பற்றினால் எழும் வெறுப்பால் பிறரை நாய்கள் என்று எழுதினால் பகுத்தறிவு பரவிவிடுமா?
இம்மாதிரியான பகுத்தறிவற்ற விளம்பர அரைவேக்காட்டு அறிவாளிகள்தான், எல்லா சமூக எளிய மக்களையும் அதே ஜாதி மத பள்ளத்தை நோக்கி திருப்பிவிடுவது.
எழுதும் முன்னர் அறிவு வேண்டாமா? பகுத்தறிவுவாதிகள் என்றால் பெரிய விஞ்ஞானிகளா? கொம்பா?
செருப்பை வீசியவர்களிடம் இன்னொரு செருப்பையும் வீசும்படி கேட்டு அறிவுப் பிரச்சாரம் செய்த பெரியார் எங்கே? இப்படி பெரியாரின் பெயரால் மக்களைக் கேவலப்படுத்தும் அறிவாளிகள் எங்கே?
இப்படியான அணுகுமுறைகளால்தான் ஜாதி ஹிந்துக்களிடம் இன்னும் எதுவும் மாறாமல் இருக்கிறது.
இந்த அணுகுமுறைகளால் அரைகுறையாக இருப்பவர்களை இன்னும் தீவிர ஜாதி மத அடிமையாக்கலாமே தவிர ஒருவரிடம்கூட பகுத்தறிவை விதைக்க முடியாது.
திராவிடம் மெல்ல நீர்த்தது இம்மாதிரியான சிந்தனையற்றவர்களின் செயல்பாடுகளால்தான்.
No comments:
Post a Comment